
இளைஞர்களின் அதீத நுகர்வு கலாச்சாரத்தால், 2026 மார்ச் மாதத்தில் தனிநபர்களின் மொத்தக் கடன் ரூ.17.32 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பிணையற்ற சில்லறைக் கடன் குடும்பங்களின் மொத்தக் கடனில் 58.4 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், 35 வயதிற்குட்பட்ட நுகர்வோரின் பங்கு 39 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தவணை தவறினால் 24% முதல் 36% வரை வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படுவதால், இளைஞர்கள் கடன் சுழற்சியில் சிக்கி சிபில் ஸ்கோர் பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.