
பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'டிராகன்' படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
ஐதராபாத்தில் உள்ள கிம்ஸ் (KIMS) மருத்துவமனையில் இன்று இந்த அறுவை சிகிச்சை நடைபெறுவதாக அவரது அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைய 6 முதல் 8 வாரங்கள் ஓய்வு தேவைப்படும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.