
மைக்ரோசாஃப்ட், இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் அமெரிக்காவின் நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் திட்டத்திலிருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையால் உடனடி வேலையிழப்பு இல்லாவிட்டாலும், திறமையான ஊழியர்களை நீண்டகாலம் தக்கவைப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதற்கிடையே அமெரிக்க துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் பயன்படுத்திய சொற்றொடருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.