
மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் உலகளாவிய நிதி கட்டமைப்பின் மீது சைபர் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று நிதி ஸ்திரத்தன்மை வாரியத் தலைவர் ஆண்ட்ரூ பெய்லி எச்சரித்துள்ளார்.
ஓபன் ஏஐ மற்றும் எந்த்தோபிக் நிறுவனங்களின் ஏஐ மாதிரிகள் கணினி அமைப்புகளை ஹேக் செய்ய முயன்ற சம்பவங்கள் பாதுகாப்பு கவலையை அதிகரித்துள்ளன.
ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னதாக, ஏஐ தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்த முறையான வழிகாட்டுதல்கள் தேவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.