
சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருக்கு இடையேயான சாத்தியமான சந்திப்பு குறித்து விவாதித்து வருவதை சீனா முதன்முறையாக உறுதி செய்துள்ளது.
இந்த மாத இறுதியில் சீனாவின் ஷென் சென் நகரில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த வரலாற்றுச் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று வல்லரசு நாடுகளின் தலைவர்களும் ஒன்றாக சந்தித்து பேசினால் அது ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.