
சென்னையை அடுத்த சிறுசேரியில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் 10 ஏக்கர் நிலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏ.ஐ. தரவு மையம் அமைக்க உள்ளது.
இதற்காக தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) 10 ஏக்கர் நிலத்தை ஜியோ நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
இங்கு தலா ஐந்து தளங்களைக் கொண்ட இரண்டு கட்டடங்களில் இந்த தரவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.