
தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவுவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் கொள்முதல் 13 லட்சம் லிட்டர் குறைந்துள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தனியார் நிறுவனங்கள் ஆவின் கொள்முதல் விலையை விட லிட்டருக்கு ரூ.12 கூடுதலாக வழங்குவதால் பால் கொள்முதல் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆவின் பால் தட்டுப்பாட்டை நீக்க கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்த வேண்டும் என அவர் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.