பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் இருந்து உடனடியாக இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிபா இன்டர்நேஷனல் மருத்துவமனைக்கு மாற்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இம்ரான் கான் அடுத்த மாதம் 16-ம் தேதி வரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும், சிகிச்சைக்கான செலவுகளை அவரே ஏற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
அவரது உடல்நிலையை கண்காணிக்க தனிப்பட்ட மருத்துவர் மற்றும் சகோதரி அடங்கிய சிறப்பு மருத்துவக் குழு அமைக்கப்படுவதாகவும், குடும்பத்தினர் வாராந்திர அடிப்படையில் சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.