
இந்தியாவில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில், முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.
புது டெல்லியில் நடக்கும் இன்றைய ஆட்டத்தில் மாலையில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்து மழையின் தாக்கம் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.