
ஆன்லைன் செயலிகள் மூலம் பணத்தை இரட்டிப்பாக்குவதாகக் கூறி 15,000 பேரிடம் ரூ. 100 கோடி மோசடி செய்த வழக்கில், முக்கிய குற்றவாளிகள் இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இதுவரை 11 பேரை கைது செய்துள்ள நிலையில், ரஞ்சித் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோரை விசாரணைக்காக மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தையோ அல்லது சைபர் குற்ற உதவி எண்ணான 1930-ஐயோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.