
கோவை மாவட்டம் ஊஞ்சவேலம்பட்டியில் தந்தையின் நண்பர் வீட்டில் 9 சவரன் நகையைத் திருடிய 19 வயது கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருடிய நகையை பொள்ளாச்சியில் இரண்டரை லட்ச ரூபாய்க்கு விற்று, அந்தப் பணத்தில் தனது காதலன் ஜனகன் சிவாவுக்கு இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுத்துள்ளார்.
தலைமறைவாக உள்ள காதலனைப் போலீசார் தேடி வரும் நிலையில், பைக் வாங்கிய வீடியோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.