
முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கும் சர்வதேச நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த முதலீடுகளின் வாயிலாக 15,300 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம் 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடும், வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் 300 கோடி ரூபாய் முதலீடும் செய்கின்றன.