
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் திடீர் மண்சரிவு காரணமாக, உதகை மலை ரெயில் சேவை நாளையும் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையே பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து, என்ஜினீயர் தலைமையில் ரெயில்வே தொழிலாளர்கள் ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் 3 இடங்களிலும், மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் 14 இடங்களிலும் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.