
சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் செம்பரம்பாக்கம் ஏரியை முதல்வர் விஜய் நேரில் ஆய்வு செய்தார்.
3,646 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 1,488 மில்லியன் கன அடி நீர் உள்ளதுடன், 150 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
ஏரியின் ஐந்து கண், 19 கண் மதகுகள் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர், நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.