
டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் சேவைகள் குறித்த பொதுமக்களின் புகார்களைப் பெற, ஆகஸ்ட் 31 முதல் புதிய கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
பொதுமக்கள் 1800-889-2015 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 73977 20230 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் 24 மணி நேரமும் தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம்.
பெறப்படும் புகார்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, உரிய தீர்வு காணும் வகையில் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.