
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88 அடியை எட்டியுள்ள நிலையில், காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆகஸ்ட் 28-ம் தேதி முதல்வர் விஜய் அணையைத் திறந்து வைக்க உள்ளார்.
தற்போது அணைக்கு விநாடிக்கு 10,807 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால், அணையின் நீர் இருப்பு 50.87 டிஎம்சி-யாக உயர்ந்துள்ளது.
அணை திறப்பு விழாவிற்கான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சேலம் மாவட்ட எஸ்பி குத்தாலிங்கம் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.