
வரும் 2036 ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவது குறித்து, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் முறைப்படி விண்ணப்பித்துள்ளது.
இப்போட்டியை நடத்த இந்தியா மட்டுமின்றி ஜெர்மனி, கத்தார், துருக்கி உள்ளிட்ட 7 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
போட்டி நடக்கும் இடம் குறித்து இறுதி முடிவு செய்ய கடைசி கட்ட தேர்வு 2028ல் தொடங்கி 2029ல் அறிவிக்கப்படும்.