
நீதிமன்றத் தடையை மீறித் தனது பாடல்களுக்கு உரிமை கோரி வருவதாகக் கூறி, இசையமைப்பாளர் இளையராஜா மீது சரிகம நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
இளையராஜாவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, அவற்றை விற்பனை செய்ய ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று சரிகம நிறுவனம் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.
ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நீதிமன்றத் தடையை மீறி இளையராஜா செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.