
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா 1945 ஆகஸ்ட் 6 அன்று உலகின் முதல் அணுகுண்டை வீசியதன் 81-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் 'பி-29 ரக எனோலாகெய்' விமானம் மூலம் வீசப்பட்ட 60 கிலோ எடையுள்ள 'லிட்டில்பாய்' அணுகுண்டு, சுமார் 4.8 சதுர கிலோமீட்டர் சுற்றளவுக்குப் பேரழிவை ஏற்படுத்தியது.
ஹிரோஷிமா தாக்குதலைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9 அன்று நாகசாகி மீதும் அமெரிக்கா அணுகுண்டு வீசியதில், ஒட்டுமொத்தமாக 1.5 லட்சம் முதல் 2.4 லட்சம் பேர் வரை பலியாகினர்.