
அமெரிக்கா தங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் போர் விரைவில் முடியும் என்றும், 7 நாட்களில் ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்கப்படும் என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள நியூயார்க் சென்ற ஈரான் அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் மூன்று மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்க உள்ள மிட்-டேர்ம் தேர்தலுக்குப் பிறகு ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.