
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தன்னை சமூக வலைதளங்களில் அவதூறாகச் சித்தரித்து தொல்லை கொடுக்கும் அடையாளம் தெரியாத நபர் மீது காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
தனது அலுவலக எண்ணுக்கும் தொடர்ந்து தொல்லை வருவதாக மேயர் பிரியா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேயர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் ஆணையர் அமல் ராஜ் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.