
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி இன்று தொடங்கி வரும் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தத் தொடரில் இந்தியா, அமெரிக்கா, தென் கொரியா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர், இதில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 பேரில் 8 பேர் தமிழர்கள்.
இந்த அலைச்சறுக்கு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.