
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகின் அப்ரிடி, அடுத்த உலகக் கோப்பை வரை தான் கேப்டனாக நீடிப்பாரா என்ற கேள்விக்கு, தற்போதைக்கு தான் தான் கேப்டன் என பதிலளித்துள்ளார்.
ஆகஸ்ட் 11 முதல் 18 வரை நடைபெறவுள்ள தேசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கவனம் செலுத்துவதாகக் கூறிய அவர், உலகக் கோப்பைக்கான மாற்று வீரர்களைக் கண்டறிவதே முக்கிய நோக்கம் என்றார்.
பாபர் அசாம் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற யூகங்கள் நிலவும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இது குறித்து இன்னும் தெளிவான முடிவை எடுக்கவில்லை.