
மேற்கு வங்காளத்தில் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவாக இன்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ந்தேதி நடந்த இந்த கொடூர சம்பவத்தில், சஞ்சய் ராய் என்பவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சீல்டா செசன்ஸ் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் ரத்னா தேப்நாத் தற்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக உள்ளார்.