
திருத்தணி முருகன் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோயில் வளாகத்தில் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் பெட்டக கவுன்டர்கள் இன்று முதல் மூடப்பட்டுள்ளன.
பக்தர்கள் தரிசனத்தின்போது செல்போனை அணைத்து (switch off) வைத்திருக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.