
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதையடுத்து இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 58.36 அடியாகச் சரிந்துள்ளது.
நீர்வரத்து குறைந்ததால் அணை கட்டப்பட்டபோது மூழ்கிய பண்ணவாடி பரிசல் துறை நந்தி சிலை முழுவதுமாக வெளியே தெரிவதுடன் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.