
முதலீடுகளை ஈர்க்க லண்டன் பயணம் மேற்கொண்ட முதல்வர் விஜய், தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை சென்னை திரும்பினார்.
இவரின் இங்கிலாந்து பயணத்தின்போது முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதன் மூலம் 10,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.