
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதிகார துஷ்பிரயோகம் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதால் காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 28-ம் தேதி பதிவு செய்த இந்த வழக்கில், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.