
பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரின் 5-வது இடத்துக்கான போட்டியில், இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது.
இந்திய அணியின் வெற்றிக்கு இஷிகா சௌத்ரி ஒரு கோலும், நவ்நீத் கவுர் இரண்டு கோல்களும் அடித்து முக்கிய பங்காற்றினர்.
1974-ம் ஆண்டுக்கு பிறகு உலகக்கோப்பை அரங்கில் இந்திய மகளிர் அணி பிடித்துள்ள மிகச்சிறந்த இடமாக இது கருதப்படுகிறது.