
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 2030-க்குள் மனிதர்கள் விலங்குகளின் மொழியைப் புரிந்து கொண்டு உரையாட முடியும் என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
விலங்குகளின் ஒலிகள், சைகைகள் மற்றும் உடல் மொழியை AI பகுப்பாய்வு செய்வதன் மூலம், அவற்றின் உணர்வுகளை மனிதர்களுக்குப் புரியும் வகையில் மொழிபெயர்க்க முடியும்.
இந்த தொழில்நுட்பம் வனவிலங்கு பாதுகாப்பு, செல்லப்பிராணி பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.