
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை மையமாகக் கொண்டு அமெரிக்கப் படைகள் ஈரானின் 60 ராணுவ இலக்குகளைத் தாக்கி அழித்துள்ளன.
அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்புடன் ஒரே நாளில் 1.80 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றிய 40 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றுள்ளன.
போர் தொடங்கிய கடந்த 6 மாதங்களில் இதுவே அதிகபட்ச கச்சா எண்ணெய் போக்குவரத்தாகும், போருக்கு முன்பு நாளொன்றுக்கு 2 கோடி பீப்பாய் எண்ணெய் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.