
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 4 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், தற்போது ரஷியா மீண்டும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனின் சப்போரியா மாகாணத்தில் ரஷியா நடத்திய இந்த குண்டு வீச்சு தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கொடூரத் தாக்குதலில் மேலும் 16 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.