
தன் 71-வது பிறந்தநாளைத் கொண்டாடிய நடிகர் மற்றும் இயக்குநரான டி.ராஜேந்தர், சென்னை தியாகராய நகரில் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி தானம் வழங்கினார்.
சாய் ரமணி இயக்கத்தில் 'கன்னடத்து பைங்கிளி' படத்திற்காக இசையமைத்து பாடல் எழுதியுள்ள அவர், அப்படத்தில் இளையராஜாவை பாட வைக்க தான் தயங்கியதாகவும் ஆனால் படக்குழுவினர் கோரிக்கையை ஏற்று அவர் பாடியுள்ளதாகவும் கூறினார்.
தான் சுங்குவார்சத்திரத்தில் சுக்கு காபி விற்றாலும் விற்பேனே தவிர சொர்க்கம் கிடைக்கிறது என்பதற்காக சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று அவர் தெரிவித்தார்.