
செக் குடியரசில் பொது ஊடகங்களுக்கான நிதி மாற்ற மசோதாவிற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் பிராக் நகரில் போராட்டம் நடத்தினர்.
புதிய மசோதாவானது வீடுகளிலிருந்து வசூலிக்கப்படும் கட்டண முறையை ரத்து செய்துவிட்டு, ஊடகங்களுக்கான நிதியை அரசின் நேரடி பட்ஜெட்டிலிருந்து வழங்க முன்மொழிகிறது.
ஊடக நிதி அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்றால் அவை ஆளும் கட்சியின் அரசியல் அழுத்தங்களுக்கு ஆளாக நேரிடும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.