
அரசு நிர்வாகத்தில் அரசியல்வாதிகளுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தினால் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் கிடைக்கும் என்று இயக்குநர் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
அல்காரிதம்களுக்கு லஞ்சம் கொடுக்க முடியாது, பணி இடமாற்றம் என மிரட்ட முடியாது என்பதால் அவை மனிதர்களை விட அதிக நன்மைகளைச் செய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருங்காலத்தில் அரசு இயந்திரங்கள் அல்காரிதம்களால் கையகப்படுத்தப்படும் என்றும், இது பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.