
தவெகவுக்கு 109 இடங்கள் கிடைத்தபோது ராகுல் காந்தி முதலில் அழைத்து ஆதரவு அளித்ததால்தான் விஜய் முதல்வர் ஆனார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பேசிய அவர், காங்கிரஸ் ஆதரவு இல்லையெனில் அமித் ஷா தவெகவை உடைத்திருப்பார் என்றும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகியிருப்பார் என்றும் குறிப்பிட்டார்.
தவெக எம்.பி.க்கள் இந்தியா கூட்டணியில் இணைந்தால் மட்டுமே கூட்டணியில் சேர்க்கப்படுவார்கள் என்றும், தற்போது தவெகவுக்கு எம்.பி.க்கள் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.