
இஸ்ரேல் மீதான தாக்குதல்களைத் தடுக்க போதுமான டிஸ்ட்ராயர் போர்க்கப்பல்கள் மற்றும் ஏவுகணை இடைமறிப்பான்கள் இல்லை என்று ஜெனரல் அலெக்சிஸ் கிரின்கோவிட்ஸ் பென்டகனிடம் எச்சரித்துள்ளார்.
ஜூன் மாத மோதலின்போது மட்டும் 100-க்கும் மேற்பட்ட THAAD இடைமறிப்பு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது கையிருப்பு குறைந்துள்ளதால் அமெரிக்க ராணுவம் சிக்கலில் உள்ளது.
அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் வளைகுடா நாடுகளின் எரிசக்தி உள்கட்டமைப்புகளைத் தாக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.