
அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரேவும், அமெரிக்காவின் பென் ஷெல்டனும் மோதுகின்றனர்.
அரையிறுதியில் பென் ஷெல்டன் 4-6, 6-3, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் பிரான்சஸ் டியாபோவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
மற்றொரு அரைஇறுதியில் அலெக்சாண்டர் ஜிவேரேவ் கரன் கச்சநோவை போராடி வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.