
துருக்கிக்கு F-35 போர் விமானங்கள் மற்றும் ஜெட் இன்ஜின்களை விற்கக் கூடாது என்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கோரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார்.
அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகள் தேசிய நலனின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என்றும், எந்த நாட்டுக்கு என்ன விற்க வேண்டும் என்பதை வேறு நாடுகள் தீர்மானிக்க முடியாது என்றும் டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ரஷ்யாவின் S-400 ஏவுகணை அமைப்பை வாங்கியதால் துருக்கி மீது விதிக்கப்பட்ட தடைகளைத் தளர்த்துவது குறித்து டிரம்ப் நிர்வாகம் ஆலோசித்து வருவது அமெரிக்கா-இஸ்ரேல் உறவில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.