சென்னை கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் இருப்பதாக திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ குற்றம் சாட்டியுள்ளார்.
பரிசோதிக்கப்பட்ட 8 இயந்திரங்களில் 3 இயந்திரங்களில் VVPAT கருவிகள் வேலை செய்யவில்லை என்றும், 157-வது வாக்குச்சாவடி இயந்திரத்தில் 7 அட்ரஸ் டேக்குகள் பூர்த்தி செய்யப்படாமல் இருந்தன என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்திடமிருந்து சான்றளிக்கப்பட்ட நகல்கள் கிடைத்தவுடன், இந்த முறைகேடுகள் குறித்து உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.