/polimer-news/media/media_files/2026/09/17/denguefever-2026-09-17-10-54-35.jpg)
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 253 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தாண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 18 வரை மாநிலத்தில் மொத்தம் 16,830 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது.
கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளை அதிகரிக்கவும், சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.