
ஜப்பானின் அய்ச்சி - நகோயா நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் ஸ்குவாஷ் அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஹாங்காங்கிடம் தோல்வியடைந்ததை அடுத்து, இந்தப் பதக்கம் உறுதி செய்யப்பட்டது.
இன்றைய போட்டிகளில் ஸ்கிப் படகு போட்டியில் வெள்ளிப் பதக்கமும், வில்வித்தையில் வெண்கலப் பதக்கமும் என இந்தியா மொத்தம் 3 பதக்கங்களை வென்றுள்ளது.