
டெல்லியில் நடைபெற்று வரும் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பொது கரன்சியை அறிமுகம் செய்வது தொடர்பாக எந்தவொரு முன்மொழிவும் வரவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மாநாட்டின் முதல் நாளில் பிரிக்ஸ் டெல்லி பிரகடனம் நிறைவேற்றப்பட்ட நிலையில், உலக அமைதி மற்றும் டாலரின் ஆதிக்கத்தைக் குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
உறுப்பு நாடுகளுக்கு இடையே உள்ள இருதரப்பு வர்த்தகத்தை அந்தந்த நாட்டின் உள்ளூர் நாணயங்களிலேயே மேற்கொள்வதில் மட்டுமே தற்போது முழு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.