
டிவிஎஸ் நிறுவனம் தனது முதல் மின்சார பைக்கான eFX 3O மாடலை 2027-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான விலையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
சிங்கிள் சார்ஜில் 200 கிமீக்கும் அதிகமான மைலேஜ் வழங்கும் வகையில் 5.3 kWh பேட்டரி பேக் மற்றும் அவசர பயன்பாட்டிற்கு 1 kWh ரேஞ்ச் பூஸ்டர் வசதியும் இதில் இடம்பெறலாம்.
மேலும் நவீன ஏடிஎஸ் (ADAS) பாதுகாப்பு தொழில்நுட்பம், இரட்டை சேனல் ஏபிஎஸ் மற்றும் பெட்டல் டிஸ்க் பிரேக் போன்ற சிறப்பம்சங்களுடன் இந்த பைக் வெளியாகிறது.