
இந்தியாவின் பிராந்திய செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பான 'நேவிக்'ஜை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ள என்.வி.எஸ்-03 செயற்கைக்கோள் வருகிற 30-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி-எப் 18 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.
இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறுகையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்திலிருந்து நீண்டகாலமாக தள்ளிவைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
வரும் 30ஆம் தேதி இரவு ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்பட உள்ளதால், அன்றைய நாள் மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பழவேற்காடு பகுதி உள்பட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.