
கேரளாவில் கனமழை தொடரும் நிலையில், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மேக வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் 115 மி.மீ. முதல் 204 மி.மீ. வரை மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக கண்ணூர், பத்தனம்திட்டா மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.