
சென்னை ஆவடி பருத்திப்பட்டு பசுமை பூங்கா பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் வழங்கிய உணவில் பல்லி கிடந்ததால், அதைச் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
உணவைச் சாப்பிட்ட பணியாளர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உணவில் புழுக்கள் மற்றும் பல்லி கிடந்த சம்பவங்கள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.