Health & Environment
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் சாலை மறியல்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் சாலை மறியல்

polimernews49m
THE BRIEF
1

தமிழ்நாட்டின் திருச்சி, நெல்லை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி போராட்டங்களில் ஈடுபட்டனர்.

2

திருவள்ளூர் அருகே சுமார் 8 மணி நேரமாக மின்வெட்டு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஊத்துக்கோட்டை – பூண்டி சாலையில் சீமைக் கருவேல மரங்களை வெட்டிப் போட்டு போக்குவரத்தைத் தடுத்து போராட்டம் நடத்தினர்.

3

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டுப் பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும் என்றும், மின்னுற்பத்தி நிறுவனங்களுடன் அரசு தரப்பில் பேசி வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார்.