ஆகஸ்ட் மாதத்தில் பண்டிகைகள் மற்றும் வார விடுமுறைகள் காரணமாக இந்தியா முழுவதும் வங்கிகளுக்கு மொத்தம் 14 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களுக்கு ஏற்ப மற்ற விடுமுறை தினங்கள் மாறுபடுகின்றன.
விடுமுறை நாட்களிலும் வாடிக்கையாளர்கள் தடையின்றி நெட் பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.