
சட்டமன்றத்தில் உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது மற்றும் கார் பந்தயம் நடத்துவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
முந்தைய ஆட்சியில் நடத்தப்பட்ட சர்வதேச கார் பந்தயத்திற்கு 24 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்த நிலையில், அது நீதிமன்ற அனுமதியுடன் நடத்தப்பட்டதாக உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.
திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் தேவையில்லை என்று அக்கட்சி முடிவு செய்துள்ளதாகவும், மற்றவர்கள் கார் வாங்கிக்கொள்ளலாம் என்றும் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.